அக்டோபர் 8                                            கர்த்தர் என் அடைக்கலம்                                    சங் 94 : 11 – 32

‘கர்த்தரே எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையாயிருக்கிறார்.’ (சங் 94 : 22)

நம்முடைய வாழ்க்கையில் மெய்யான விசுவாசம் அவசியம்  என்பத நாம் அதிகம் உணரவேண்டும். மெய் விசுவாசமில்லாத அநேகரை நாம் அவ்வப்பொழுது அவர்கள் வார்த்தையிலும் செய்கையிலும் கண்டு கொள்ளலாம். இந்த சங்கீதத்தை எழுதின சங்கீதகாரன் இந்த்ய விசுவாச அறிக்கையை தான் சந்தித்த இக்கட்டான சூழ்நிலையிலும் தெரிவிக்கிறதை காண்கிறோம்.

            அவர் இந்த சங்கீதத்தில் எவ்விதமான மக்களை எதிர்க்கொள்ளுகிறார் என்று பார்க்கிறோம். 1. துன்மார்க்கர் 2. அக்கிரமக்காரர் 3. வாயாடுகிறவர்கள் 4. கடினமாய் பேசுகிறவர்கள் 5. தேவ ஜனத்தை நொறுக்குகிறவர்கள் 6. சுதந்திரத்தை ஒடுக்குகிறவர்கள் 7. கொலைகாரர்கள் 8. வீம்பு பேசுகிறவர்கள் (சங் 94 : 2 – 6), ஆம்! இவ்விதமான மக்களை எதிர்க்கொள்ளும்பொழுது மெய்யாலுமே நாம் நம்முடைய விசுவாசத்தை உறுதிசெய்து கொள்வது மிக அவசியமானது.

            மெய்வுசுவாசமானது மற்றவர்களை சார்ந்தது அல்ல. நம்முடைய சொந்த இருதயத்தைச் சார்ந்தது. இந்த உலகத்தை நான் நோக்கும்போது அது இன்னும் அத்கமாய் கேட்டை நோக்கி ஓடுகிறது. அதின் மத்தியில் நம் விசுவாசத்தைக் காத்துக்கொள்வது, உறுதிப்படுத்திக்கொள்வது தொடர்ந்து நம்மில் நடைபெறவேண்டிய காரியம்.

            சங்கீதகாரன் சொல்லுகிறவிதமாக தேவன் உன் அடைகலமாக, எந்த சூழ்நிலையிலும் உயர்ந்த கன்மலையின்மேல் உன்னை பாதுகாப்பவராக இருக்கிறாரா? நீ இவ்விதமாக தேவனைச் சார்ந்திருக்கிறாயா? உன் விசுவாசத்தை அவ்வப்பொழுது அராய்ந்துப் பார்ப்பது நலமானது. ‘என் கால்கள் சறுக்குகிறது என்று நான் சொல்லும்பொழுது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவை தேற்றுகிறது.’ (சங் 94 : 18, 19) தேவனுக்குப் பயப்படாத மக்களின் நிலையென்ன? அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள் மேல் திரும்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார் (சங்94 : 23)