கர்த்தருடைய ஆலயம்

செப்டம்பர் 28                                   கர்த்தருடைய ஆலயம்                                         சங்கீதம் 122 : 1 – 9

‘கர்த்தருடைய ஆலயத்திற்கு போவோம் வாருங்கள் என்று

அவர்கள் சொல்லும்போது மகிழ்சியாயிருந்தேன்’ (சங்க் 122 : 1)

இன்று நீயும் இவ்விதம் சொல்லமுடிகிறதா? இன்று அநேகர் அற்பகாரியங்களுக்காக தேவனுடைய ஆலயத்தை, சபைக் கூட்டங்களை அலட்சியப்படுத்துகிறார்கள். அதை அற்பமாய் எண்ணுகிறார்கள். அப்படி ஆலயக்கூட்டங்களில் கலந்துக்கொள்ள முடியாமல் போனதைக்குறித்து வெட்க்கப்படுவதுமில்லை, வருத்தப்படுவதுமில்லை. ஆனால் இது மிகபெரிய இழப்பு என்பதை அறிந்துக்கொள். நீ ஆலயத்தை அசட்டை செய்யும்போது, தேவனை அசட்டை செய்கிறாய். அவர் உனக்கு அற்பமானவராய் போய்விட்டார். அவரை அசட்டை செய்து நீ ஆசீர்வதிக்கப்படமுடியும் என்று நினக்கிறாயா? அப்படியொரு எண்ணம் உனக்கு இருக்குமானால், பிசாசு உன்னை வஞ்சிக்கிறான் என்பதை அறிந்துக்கொள்.

ஏன் இவர்கள் ஆலயத்தை அசட்டை செய்கிறார்கள்? முதலாவது இவர்களுக்கு ஆவிக்குறிய வாழ்க்கையைக் குறித்த விலை மதிப்பு கிடையாது. இந்த உலகத்திற்காகவே வாழவிரும்புகிறார்கள். எந்த ஒரு மனிதன் தேற்வனுடைய காரியங்களை அசட்டை செய்கிறனோ, அவன் மெய்யான ஆசீவாதத்தை காணமுடியாது. அவ்விதமான மக்கள் சாம்பலை மேய்கிறார்கள். தங்களுக்கு மெய்யான சமாதானத்தையும், நித்திய ஜீவனையும் கொடுக்கும் வழியை புறக்கனித்து எவ்வளவு தின்றாலும் திருப்திப்படுத்தாத சாம்பலைத் தேடுகிறவர்கள். தேவன் இவ்விதமான மக்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க்கிறார். அது என்ன? ‘அப்பமல்லாததிற்காக பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்கு கவனமாய் செவிக்கொடுத்து நலமானதச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்தத்தினால் மகிழ்ச்சியகும்’ (ஏசாயா 55 : 2) சகோதரனே! சகோதரியே! யோசித்துப்பார், நீ இன்னும் ஆலயத்தை அசட்டைபண்ண விரும்புகிறாயா? இனிமேலும் இந்த பாவத்தைச் செய்யாதே.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload CAPTCHA.