ஜூலை 31                                                     கனிகொடுப்பாய்                                         2 பேதுரு 1 : 1 —10

‘இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால்,
உங்களை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற
அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்க
வொட்டாது.’ (2 பேதுரு 1 : 8)

       பேதுரு இந்த வசனத்திற்கு முன்பாக அநேக ஆவிக்குரியநற்பண்புகளை எழுதுகிறர். அவை விசுவாசாம், தைரியம், ஞானம், இச்சையடக்கம், பொறுமை, தேவபகதி சகோதர சிநேகம், அன்பு அகியவை. இன்றைக்கு அநேகர் நல்ல ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறும்படியான அருமையன வாய்ப்புகள் இருந்தும் அவைகளில் அவர்கள் வளர்வதில்லை. ஏன் என்று இவைகளைக் குறித்து சிந்திப்போமானால் அவர்கள் இந்த நற்பண்புகளை பெற வாஞ்சிப்பதில்லை. அன்பன சகோதரனே! சகோதரியே! இதை வாசிக்கிற நீயும் ஒருவேளை அவ்விதமன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கலம். அதைக்குறித்து நீ உணறமுடிகிறதா கர்த்தருக்கென்று நான் கனியுள்ள வாழ்க்கை வாழவேண்டும் என்று வாஞ்சிக்கிறாயா? அவர் பணியில் ஆதும கனிகளையும், உன் வாழ்க்கையில் ஆவியின் கனிகளையும் பெற வாஞ்சில்லிறாயா? கனியுள்ள நல்ல மற்றத்தையே எல்லோரும் வாஞ்சிப்பார்கள். கனியற்ற மரத்தை யார் வாஞ்சிப்பார்கள்?

                    உன் வாழ்க்கை கனியற்றதாக இருக்குமானால் அது வீண் என்று சொல்லப்படுகிறது. தேவனுடைய ராஜ்யத்தில் நீ பிரயோஜனமான பாத்திரமல்ல. நீ இவ்விதம் வாழுவது உன்னைத் துக்கப்படுத்துமானால் நலமாயிருக்கும். நீ கனியற்ற வாழ்க்கை செய்யும்போது தேவன் எப்படி உன்னில் பிரியமயிருப்பார்?ஆகவே இவைகளைப் பெற்று வளர நீ என்ன செய்யாவேண்டும்? ஜாக்கிர்டதையை காண்பிக்கவேண்டும். ஆகவேதான் ‘ அதிக கருத்தோடே அவைகளுக்காக ஜெபிக்கவேண்டும். அவைகளில் வளர நீ உனக்கு கொடுக்கும் ஒவ்வொரு ஆவிக்குரிய பயிற்சியிலும் கருத்தாய், ஜாக்கிரதையாய், ஜெபத்தோடே கடந்து செல். அப்போது கனிகொடுப்பாய்.