ஜூலை 23                                                      இரண்டு முத்துக்கள்                                          ரோமர்  15 : 1–10

 

‘பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன்’   

                (ரோமர்,15 :6)

அருமையான இரண்டு முத்துக்களை தேவன் நமக்கு அளிக்கிறார். இவைகள் இரண்டும் ஒரு மனிதனில் எப்போது நிலைத்திருந்தால் அவனைக்காட்டிலும் மகிழ்சியுள்ள மனிதன் யாராக இருக்கமுடியும்? இந்த உலகத்தில் நீங்கள் எங்கு சென்றாலும் இவைகளை பெறமுடியாது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் இவைகளை நீங்கள் வாங்கமுடியாது. ஒருவேளை இவைகளை பணத்திற்கு வாங்கும்படியானவைகளாக இருந்தால்ிச்சயம் எத்தனையோ பணக்காரர்கள் இவைகளை அதிகமான விலைக்கொடுத்தாகிலும் வாங்கிக்கொள்ளுவார்கள். ஏனென்றால் இவைகள் இல்லாதிதனால் அவர்கள் படுக் அவதிகளையும், தூக்கமின்மையும் அறிவார்கள். ஆனால் இவைகள் பெறும் இடம் அறியாமலேயே தங்கள் வாழ்நாட்க்களை முடித்துவிடுகிறார்கள், என்ன பரிதாபம்.

 

அன்பான சகோதரனே! சகோதரியே! இவைகளை அளிப்பவரை நீங்கள் அறிவீர்களா? அவர் மாத்திரமே இவைகளை ஒருவனுக்கு கொடுக்கமுடியும என்று உங்களுக்குத் தெரியும் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் இவைகள் இல்லாததினுடைய விளைவை நீங்கள் நன்றாய் அறிவீர்கள். எத்தனையோ முறை உங்கள் சொந்த ஞானத்தால், பெலத்தால் முயற்சித்தும் தோற்றுப்போயிருக்கிறீர்கள். இவ்விதமான தோல்விகள் உங்களுக்கு நன்மையாக முடியட்டும். ஆம் அவைகள் உங்கள் சுயநம்பிக்கையை சுயபெலத்தை நீங்கள் சார்ந்திராமல் தேவனை நோக்கிப்பார்க்கச் செய்யட்டும்.

 

தேவ ஆவியனவர் ஒருவனில் வாசம்செய்யும்போது அவனில் தேவன் நீடிய பொறுமை என்ற கனியைக் கொடுக்கிறார். தேவ ஆவியானவர் நம்மை இரட்சிக்கும்போது நம்மில் வாசாம் செய்து இவ்விதம் செயல்படுகிறார். மேலும் இந்த தேவன் ‘ அவர்களை நடத்தி திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன்’ (ஏசாயா 57 ; 18) என்று சொல்லுகிறார். ஆறுதலற்ற நேரத்தில் தேற்வனை நோக்கி ஜெபி. தேவன் தம்முடைய வாக்கின்படி உனக்கு ஆறுதல் அருளுவார். நமது தேவனே பொறுமையையும், ஆறுதலையும் அளிக்கும் தேவன்.