அக்டோபர் 19                                       இயேசுவை சுட்டிக்காட்டு                                  யோவான் 1 : 29 – 37

‘இதோ உலகத்தின் பாவத்தை சுமந்துத் தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’ (யோ 1 : 29)

            யோவான்ஸ் நானகன் ஆண்டவராகிய இயேசு அவனிடத்தில் வரக்கண்டு இவ்விதம் சொன்னார். மேலும் அவருடைய சீடர்களிடம் ‘இதோ தேவ ஆட்டுக்குட்டி’ என்று ஆண்டவராகிய இயேசுவை சுட்டிக்காண்பித்தான். மெய்யான தேவ ஊழியனுக்கு இதுதான் அழகு. அவன் எப்போதும் ஜனங்களுக்கு இயேசுவைச் சுட்டிகாட்டுகிறவனாகக் காணப்படுவான்.

            இந்த நாட்க்களில் அநேக ஊழியர்கள் இயேசுவை ஜனங்களுக்கு சுட்டிக்காட்டுவதில்லை. இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி தன்னையே ஜனங்களுக்குக் காட்டவிரும்புகிறான், அவ்விதம் செய்கிறார்கள். தான் விசேஷித்த வரம் பெற்ற நபர் என்று சொல்லி, தன் பக்கம் ஜனங்களை இழுக்க முயற்சிக்கிறார்கள். இவ்விதமான ஊழியர்களைக்குறித்து எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். இவர்கள் கள்ளத்தீர்க்கத்தரிசிகள் ஆட்டுத்தோழை போர்த்துக்கொண்டு ஜனங்களை வஞ்சிக்கிறவர்கள் எச்சரிக்கையாயிருங்கள்.

            மேலும் யோவாஸ்நானகன் தன்னைப்பற்றி என்ன சொல்லுகிறார்? நான் இயேசுவல்ல, இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக நான் ஞானாநனம் கொடுக்கவந்த ஒரு கருவி தான் (யோவான் 1 : 31). நான் ஒரு பாவி, தேவனுக்கு சமமானவனல்ல என்று தன்னைக்குறித்து மெய்யாலும் அறிக்கையிட்டான். அதோடு நின்றுவிடாமல் ‘அவர் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சியி வாரை அவ்பிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல’ (யோ1 : 27) என்றார். அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்பதே யோவானின் குறிக்கொள்.

            இவ்விதமான சிந்தைய்டில்லாத ஊழியக்காரனைக் குறித்து எச்சரிக்கையா இரு. மெய் ஊழியக்காரனின் மிக முக்கிய குணாதிசயங்களில் முக்கியமானது தாழ்மை. எங்கு தாழ்மையில்லையோ அங்கு இயேசுவுக்கு இடமில்லை. தாழ்மை இல்லாத இடத்தில்பிசாசுதான் இருப்பான். ஆனால் அவன் ஒளியில் வேஷம் தரித்திருப்பான். ஊழியக்காரர்கள் என்று சொல்லி வருகிற அனவரையும் நம்பாதே. நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்று சொன்ன இயேசுவைச் சுட்டிக்காட்டாதவன் மெய் ஊழியனல்ல.