அழைத்த தேவன்

அக்டோபர் 31                                                       அழைத்த தேவன்                                          கலாத் 1 : 1 – 15

ன் தாயின் வயிற்றில் இருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன் (கலாத் 1 : 15)

பவுல் கலாத்தியர் முதலாம் அதிகாரத்தில் தன்னைப் பற்றிய சாட்சியில் இவ்விதம் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு விசுவாசியும் இவ்விதமாகவே சொல்லக்கூடும். இது பவுலுக்கு மட்டுமல்ல. இது உனக்கும் உரியது. அவ்விதம் உன் வாழ்க்கையில் உணருகிறாயா?

தேவன் உன்னை உன் தாயின் வயிற்றில் இருந்தது முதல் உன்னை தெரிந்துக்கொண்ட தேவன், பிரிதெடுத்த தேவன் என்று சொல்லுகிறார். ஆம்! தேவன் அவ்விதம் தெரிந்துக்கொள்ளுகிறவர். மாத்திரமல்ல. சங்கீதக்காரன் சொல்லுகிறப்படி என் தாயின் கற்பத்தில் காப்பாறினீர். (சங்க் 139 : 13) என்றும் சொல்லக்கூடும். ஒவ்வொரு தேவ பிள்ளையையும் தேவன் கருவிலிருந்தே பராமரித்து பாதுக்காக்கிறவர். எவ்வளவு உன்னதமான தேவன், எவ்வளவு அழகாக தம்முடைய மக்களை காப்பாற்றுகிறார் பாருங்கள்!  ஏனென்றால் நீ அவருடைய பார்வையில் விசேஷித்தவன்! விசேஷித்தவள்! ஆகவேதான் அவர் கண்மணியைப்போல காக்கிறார்.

அவர் மேலும் ஒவ்வொரு விசுவாசியையும் கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் பிரித்தெடுக்கிறார். தம்முடைய குமாரனாக குமாரத்தியாக பிரித்தெடுக்கிறார். குறிப்பிட்ட மேலான ஆவிக்குறிய நோக்கத்திற்கென்று பிரித்தெடுக்கிறார்.

தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்’ உன்னில் எந்த நன்மையையும் பார்த்து உன்னை அழைக்கவில்லை, அவர் அழைக்கதக்கதான தகுதி எதுவும் உன்னிடத்தில் இல்லை. ஆனால் தேவன் இலவசமான கிருபையினால் உன்னை அழைத்திருக்கிறார். பவுலின் வாழ்க்கையில் தகுதியற்ற தன்னை தம்முடைய கிருபையினால் தேவன் அழைத்திருக்கிறார் என்கிற உணர்வு அவரை ‘கிறிஸ்துவின் அன்பு என்னை ந்ருக்கி ஏவுகிறது’ என்று சொல்லும்படியாக வழிநடத்தியிருக்கிறது. உன்னை அவ்விதம் தேவன் அழைத்திருக்கிறார் என்று உணருவாயானால் தேவனுக்கென்று உன் ஒப்புக்கொடுத்தலும், அர்பணிப்பும் மிகச்சிறந்தாய் இருக்கும்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload CAPTCHA.